உ.பி. சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு

லக்னோ: உத்திரப்பிரதேசம் சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்துள்ளது. இந்தநிலையில் சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிட கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.எம்.பி.,யாக உள்ள அவர், தன் அசம்கர் லோக்சபா தொகுதி மக்களின் விருப்பத்தைக் கேட்டு முடிவு செய்வதாக கூறியிருந்தார். இந்தநிலையில் மெயின்புரி மாவட்டத்தின் கர்ஹால் தொகுதியில் அவர் போட்டியிட உள்ளதாக, மூத்த தலைவர் அசுதோஷ் வர்மா நேற்று கூறினார்.

இந்நிலையில், உத்திரப்பிரதேசம் சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில்  கர்ஹால் சட்டமன்றத் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிடப்போவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் நானும், என் கட்சியினரும் போட்டியிடுகிறோம் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். இந்த மாவட்டத்தில் சமாஜ்வாதி கட்சி மிகவும் வலுவாக உள்ளது. மெயின்புரி லோக்சபா தொகுதியில் தொடர்ந்து ஒன்பது முறை அக்கட்சி வேட்பாளர்கள் வென்றுள்ளனர். கட்சியின் நிறுவனரும், அகிலேஷின் தந்தையுமான முலாயம் சிங் யாதவ், இங்கு ஐந்து முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: