லக்னோ அணியின் கேப்டனாக ரூ.17 கோடிக்கு ராகுல் ஒப்பந்தம்

மும்பை: 15வது சீசன் ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளது. அடுத்த சீசனுக்கான வீரர்கள் பொது ஏலம் பிப்.12, 13ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. ஆனால் ஏலத்திற்கு முன் 2 புதிய அணிகளும் 3 வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கே.எல்.ராகுலை லக்னோ அணி ரூ.17 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் அடுத்த சீசனில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக ராகுல் மாறி உள்ளார்.

இதற்கு முன் கோஹ்லியை 2018ம் ஆண்டு பெங்களூரு அணி 17 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ராகுலை தவிர லக்னோ அணி ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்க்ஸ் ஸ்டோனிசை 9.2 கோடிக்கும், லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய்யை ரூ.4 கோடிக்கும் ஒப்பந்தம் செய்துள்ளது. 3 பேருக்கும் அந்த அணி ரூ.59.89 கோடி செலவிட்டுள்ளது. மேலும் கேப்டனாக ராகுல் செயல்படுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டிபிளவர் பயிற்சியாளராகவும், கவுதம் காம்பீர் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: