நெல் சாகுபடியில் போதிய வருமானம் இல்லாததால் கரும்பு சாகுபடி: இரட்டிப்பு லாபம் தருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் நெல் சாகுபடியில் போதிய வருமானம் கிடைக்காததால் விவசாயிகள் கரும்பு பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகளவு நடைபெற்று வந்த நெல் சாகுபடி தற்போது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மாவட்டத்தில் 20,000 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த நெல் சாகுபடி படிப்படியாக குறைந்து தற்போது 6,000 முதல் 7,000 ஹெக்டேராக குறைந்துள்ளது.

நெல்சாகுபடியில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கும் விவசாயிகள் மாற்றுப் பயிர்களை நட துவங்கியுள்ளனர். அதன்படி நெல் சாகுபடி செய்த விவசாயிகள் கரும்பு விவசாயம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். கரும்பு பயிரிடுவதன் மூலம் அதிக லாபம் கிடைப்பதாக தெரிவிக்கும் விவசாயிகள் ரூ.1 லட்சம் செலவு செய்தால் ரூ.2 லட்சம் வரை கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். இதனால் பெருமளவு விவசாயிகள் கரும்பு பக்கம் தங்கள் கவனத்தை செலுத்த துவங்கியுள்ளனர்.       

Related Stories: