நிலக்கோட்டையில் பயமுறுத்தும் பாழடைந்த போலீஸ் குடியிருப்பு-இடித்து அப்புறப்படுத்த கோரிக்கை

வத்தலக்குண்டு : நிலக்கோட்டை  புதுத்தெரு பகுதியில் காவலர் குடியிருப்புகள் உள்ளன. இவை பராமரிப்பின்றி  இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால் இங்கிருந்தவர்கள் அனைவரும் காலி செய்து  விட்டனர். தற்போது இக்குடியிருப்புகள் பாழடைந்து புதர் மண்டி  காணப்படுகிறது. இங்கு இரவு நேரங்களில் சிலர் கூடி சமூகவிரோத செயல்களில்  ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். புதர்களில் உள்ள பாம்பு உள்ளிட்ட பல்வேறு விஷப்பூச்சிகள் மற்ற குடியிருப்புகளில் நுழைந்து மற்றவர்களுக்கு அடிக்கடி சிரமம் ஏற்படுத்தி வருகிறது. பள்ளி மாணவர்கள் சிலர் மாலை நேரங்களில் அங்கு சென்று விளையாடுவதால் குடியிருப்பு இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்குள்ள போலீஸ் குடியிருப்புகளை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: