சீர்காழியில் குளத்தை ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு-தூர்வார மக்கள் கோரிக்கை

சீர்காழி : சீர்காழியில் குளத்தை ஆக்கிரமித்த ஆகாய தாமரை செடிகளை அகற்றி தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தென்பாதி சாலையோரத்தில் உள்ளது டிடி.பிள்ளை குளம். இக்குளம் தொடர் மழையின் காரணமாக தற்போது முழு அளவில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் தென்பாதி சுற்று வட்டார பகுதிகள் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தென்பாதி பகுதியின் நீர் ஆதாரமாக விளங்கும் இக்குளத்தில் தற்போது முழுவதுமாக ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் தண்ணீரில் சூரிய ஒளி படாமல் தண்ணீர் துர்நாற்றம் வீசுவதாகவும், தண்ணீர் குடிக்கச் செல்லும் நாய்கள் தவறி விழுந்து மீண்டு வரமுடியாமல், இதுவரை 5க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்துள்ளதாக தெரிகிறது. மேலும் குளத்தில் முழு அளவில் தண்ணீர் இருந்தும் யாரும் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: