தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமே இல்லை: இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

சென்னை: தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமே இல்லை என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை டிஎன்பிஎஸ்சி சாலையிலுள்ள புதிய கழிப்பிட கட்டிடத்தை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதிமாறன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் சேகர் பாபு எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையிலேயே திமுக அரசு செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் கடந்த ஆண்டு தைப்பூசத்தின் போது வேல் எடுத்து கொண்டு மாவட்ட மாவட்டமாக சென்றவர்கள் இந்த ஆண்டு அதைப்பற்றி கவலைபட மாட்டார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் எம்மதமும் சம்மதமே என்றும் முதல்வரின் நிலைப்பாடும் அதுவே என்றும் மேலும் தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமே இல்லை என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

Related Stories: