மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை இனி செம்மொழி சாலை என அழைக்கப்படும்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: செம்மொழி தமிழாய்வு நிறுவனம் உள்ள சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் சாலை செம்மொழி சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் நடந்த கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை அறிவித்தார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகத்தில் செம்மொழி தமிழ் இருக்கைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு என தனியாக கட்டிடம் வேண்டும் என்று கலைஞர் விரும்பினார் எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Stories: