சென்னை: நிலம், மண், பண்பாடு, மக்களுக்கு இலக்கணத்தை வகுத்திருக்கிறது நம் தமிழ் மொழி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், பெரும்பாக்கத்தில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு தனி கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். தமிழ் மொழி ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கு செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் பணியாற்றி வருகிறது என்று கூறினார்.