தமிழ் எந்தமொழியில் இருந்தும் கடன் வாங்கி உருவான கிளை மொழி அல்ல; தமிழில் இருந்துதான் பல மொழிகள் உருவாகின: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழ் எந்தமொழியில் இருந்தும் கடன் வாங்கி உருவான கிளை மொழி அல்ல; தமிழில் இருந்துதான் பல மொழிகள் உருவாகின என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை வழங்கி முதல்வர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கலைஞர். உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மொழியியல் அறிஞர்கள் தமிழ் தொன்மையான மொழி என கூறுகின்றனர். பண்பாட்டின் அடையாளமாக தமிழ் மொழி இருக்கிறது. தமிழ் பேசும்போது இனிமையாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

Related Stories: