தமிழக அரசின் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் விருதாளர்களுக்கு விருது வழங்கினார். 2010 முதல் 2019ம் ஆண்டு வரையிலான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கப்பட்டது. விருதாளர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ், கலைஞர் கருணாநிதி சிலை வழங்கப்பட்டன. பேராசிரியர்கள் வீ.எஸ்.ராஜம், உல்ரிக் நிக்லாஸ் தவிர மற்றவர்களுக்கு நேரடியாக விருது வழங்கப்பட்டது. 

Related Stories: