மும்பையில் 20 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு..!!

மும்பை: மும்பையில் 20 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். தீ விபத்தில் காயம் அடைந்த 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மும்பையின் டார்டியோ பகுதியில் உள்ள பாட்டியா மருத்துவமனை அருகே அமைந்துள்ள 20 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் 18 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன்படி,காலை 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து,தீ அணைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டிடத்திற்குள் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா? என்று தேடும் பணியிலும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 13 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.

Related Stories: