துளித்துளியாய்....

* ஐஎஸ்எல் கால்பந்து போட்டித் தொடரில் ஜாம்ஷெட்பூர் - மும்பை அணிகளிடையே நேற்று நடைபெற இருந்த லீக் ஆட்டம் கொரோனா பிரச்னை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை 5 ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் படுதோல்விக்கு ஐபிஎல் டி20 தொடர்தான் காரணம் என்று கூறுவது முட்டாள்தனமானது என்று இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

* ஐசிசி யு-19 உலக கோப்பையில் இன்று உகாண்டா அணியுடன் இந்தியா மோத உள்ள நிலையில், கேப்டன் யஷ் துல் உள்பட 5 வீரர்கள் கொரோனா காரணமாக பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

* பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய வளாகத்தில் (சாய்) பயிற்சி பெற்று வரும் வீரர்களில் 33 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர்களில் 16 பேர் இந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி அணியை சேர்ந்தவர்கள் ஆவர்.

* ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டித் தொடரின் தொடக்க போட்டியில் ஆஸ்திரேலியா 18-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவை நேற்று வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பான் 5-0 என்ற கோல் கணக்கில் மியான்மரை வென்றது.

* ஆஸ்திரேலியாவின் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான (அக்.16 - நவ. 13) அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இந்தியா தனது முதல் போட்டியில் அக்.23ம் தேதி மெல்போர்னில் பாகிஸ்தானை சந்திக்கிறது.

* அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்லும் இலங்கை அணி 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

Related Stories: