அமைச்சர்கள் ராமசந்திரன் பி.மூர்த்திக்கு கொரோனா: அதிமுக எம்.எல்.ஏக்கும் தொற்று

சென்னை: தமிழக அமைச்சர்கள் ராமசந்திரன், பி.மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக வனத்துறை அமைச்சர்  ராமசந்திரன் கடந்த இரு நாட்களாக சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு  வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அவர், நீலகிரி மாவட்டம் குன்னூர் இளித்தொரை பகுதியில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்திக்கு கடந்த 2 நாட்களாக லேசான காய்ச்சல் இருந்தது. நேற்று முன்தினம் இரவு காய்ச்சல் சற்று அதிகமானதால், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில் அவருக்குகொரோனா பாதிப்பு இருந்தது தெரிந்தது. தொடர்ந்து மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் உள்ளார்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் (தனி) தொகுதி அதிமுக எம்எல்ஏ அர்ஜுனனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கார் மூலம் சென்னை சென்றார்.

Related Stories: