8ம் கட்ட அகழாய்வு, அருங்காட்சியக பணிக்காக கீழடியில் நிலம் அளவீடு

திருப்புவனம்: கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு, திறந்தவெளி அருங்காட்சியக பணிக்காக வருவாய்த்துறையினர் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் இதுவரை 7 கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த அகழாய்வானது கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் நடந்தன. இதுவரை நடந்த அகழாய்வுகளில் தங்கம் உட்பட பல்வேறு அணிகலன்கள், முதுமக்கள் தாழி, கட்டிட தொடர்ச்சி, பானைகள், பழங்கால கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. 7ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த செப்டம்பர் இறுதியில் நிறைவடைந்தன. அடுத்தக்கட்டமாக அகழாய்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கீழடி, வெம்பக்கோட்டை உட்பட 7 இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெறுமென அறிவித்தார். இதனையடுத்து கீழடியில் இந்நிலையில் நேற்று கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிக்காகவும், திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கவும் வருவாய்த்துறை சார்பில் கதிரேசன் நிலத்தில் அளவீடு பணிகள் நேற்று நடந்தன. தற்போது மொத்தம் ஒரு ஏக்கர் அளவீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 30 சென்ட் பரப்பளவில்தான் கடந்த 6ம் கட்ட அகழாய்வு நடந்தது. எனவே மீதமுள்ள இடத்தை 8ம் கட்ட அகழாய்வு மேற்கொள்ள தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. உரிய அனுமதி கிடைத்த பின் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

Related Stories: