×

தமிழ்த்தாய் வாழ்த்து வழக்கு தள்ளுபடி

சென்னை: மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலில், திருத்தங்கள் செய்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அறிவித்ததை எதிர்த்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய முழுமையான பாடலை திருத்தியதை எதிர்த்து ஜெபமணி ஜனதா கட்சியின் பொது செயலாளரான ஜெ.மோகன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2007ல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றி அமைக்க அரசுக்கு உரிமை உள்ளது. பாடலுக்கான காப்புரிமையை மனுதாரர் பெற்றிருக்கவில்லை. எனவே, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து, 1970ல் திருத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து பாடப்பட்டு வந்த நிலையில், 37 ஆண்டுகள் கழித்து வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது என கூறிய நீதிபதிகள், ஜெபமணி மோகன்ராஜின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.Tags : Tamiltai greeting case dismissed
× RELATED தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை...