சென்னையில் சிறப்பு முகாம் மூலம் 20,000 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2ம்  தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திய பிறகு 9 மாதங்கள் கடந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோயுடன்  உள்ள 60 வயதுக்குதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி  செலுத்தப்பட்டு வருகிறது.

சென்னை  மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இணைநோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட   முதியோர்களுக்கு  முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தும்  சிறப்பு முகாம் 160 இடங்களில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை  நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம்களில் சுமார் 20,000 நபர்களுக்கு தடுப்பூசி  செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செலுத்தப்பட்டது.

Related Stories: