ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், தகுதியுள்ள  ஆதிதிராவிட, பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.

2021-2022ம் கல்வியாண்டுக்கு ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்காக 6-1-2022 அன்று இணையதளம் திறக்கப்பட்டு, 10.2.2022 இறுதி நாள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், தகுதியுள்ள ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்கள் தமது கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதி, வருமானம், மதிப்பெண் சான்றுகள், சேமிப்புக் கணக்கு புத்தகம், ஆதார் கார்டு நகல்கள் ஆகியவற்றுடன் 10.2.2022க்குள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: