ஆவடியில் இருந்து பெங்களூருக்கு நேரடி பேருந்து போக்குவரத்து சேவை: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

ஆவடி: ஆவடியில் இருந்து பெங்களூருக்கு நேரடி போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆவடி இருந்து பெங்களூருக்கு நேரடி பஸ் போக்குவரத்து சேவையை ஏற்பாடு செய்ய விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று மாலை ஆவடியில் இருந்து பெங்களூருக்கு புதிய விரைவு பேருந்து சேவையை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார். இந்த பேருந்து (தடம் எண்:-831) தினமும் இரவு 9 மணி அளவில் ஆவடி இருந்து புறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், விரைவு போக்குவரத்து கழக பொது மேலாளர் குணசேகரன், பொறுப்பு குழு உறுப்பினர்கள் கே.ஜெ.ரமேஷ், வக்கீல் கு.சேகர், பதாகை வீ.சிங்காரம், ஆவடி மாநகர செயலாளர்கள் ஜி.ராஜேந்திரன், பேபி சேகர், ஜி.நாராயணபிரசாத், பொன்.விஜயன், தொமுச நாகூர்கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

Related Stories: