செல்போனில் ஆபாசமாக பேசியதால் தகராறு வாலிபருக்கு கத்திக்குத்து : தம்பதி உள்பட 4 பேர் கைது

ஆவடி: கொரட்டூர் மாதனாங்குப்பம் அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரண்(22).இவரது வீட்டில் அருகில் வசிக்கும் நண்பர் பிரபு(25). இவர் பெருமாள்பட்டு மல்லிகை நகரை சேர்ந்த சோபியா(22) என்பவருடன் செல்போனில் அடிக்கடி ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதுகுறித்து சோபியா தனது கணவர் ஜெய்பிரகாஷூடம் தெரிவித்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி இரவு சோபியா, ஜெயபிரகாஷ் மற்றும் இருவருடன் பிரபு வீட்டுக்கு வந்து அவரை கண்டித்தனர். அப்போது, அவர்களை பிரபுவின் நண்பர்கள் சரண், பிரவீன், ரஞ்சித் ஆகியோர் தட்டி கேட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது, சோபியா தலைமையில் வந்த கும்பல் கத்தியை எடுத்து சரணை சரமாரியாக குத்தியது.

இதில், அவருக்கு தலை, நெஞ்சு, இடதுகால் ஆகிய  இடங்களில் பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதனை பார்த்த, அக்கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. பின்னர், உறவினர்கள் படுகாயமடைந்த சரணை 108 ஆம்புலன்ஸ் மூலம்  மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்படி கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ஜெயபிரகாஷ்(28), அவரது மனைவி சோபியா(22) மற்றும் அவர்களது நண்பர்கள் மணலி சின்ன மாத்தூரை சேர்ந்த ரியாசுதீன்(21), அம்பத்தூர் காமராஜபுரம் குளக்கரை தெருவை சேர்ந்த பாலாஜி(30) ஆகியோரை நேற்று  கைது செய்தனர்.

Related Stories: