மொட்டை மாடியில் விளையாடியபோது விபரீதம் மின்சாரம் பாய்ந்து 2 சிறுமிகள் படுகாயம்: ஆபத்தான நிலையில் சிகிச்சை

பொன்னேரி: பொன்னேரியை சேர்ந்தவர் மாரிமுத்து(50). நகராட்சி தூய்மை பணியாளர். இவரது மகள் நாகலட்சுமி(16). அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தூய்மை பணியாளர் மூர்த்தியின் மகள் மணிமேகலை(3). நேற்று  முன்தினம் இரண்டு சிறுமிகளும் தங்கள் வீட்டின் அருகேயுள்ள மொட்டை மாடியில் விளையாடினர். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் சிறுமிகளின் கைகள் பட்டன.

இதனால் மின்சாரம் பாய்ந்து இருவரும் மொட்டை மாடியில் இருந்து தூக்கி கீழே வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த 2 சிறுமிகளையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: