காஷ்மீர் சர்வதேச எல்லையில் கூடுதலாக ராணுவம் குவிப்பு

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரில் உள்ள 200 கி.மீ. தூர சர்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவதைத் தடுக்க, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர். இது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறிய போது, `எல்லை ஊடுருவல்கள் தடுக்கப்பட்டுள்ளன. குடியரசு தினத்தையொட்டி, சர்வதேச எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

அப்பகுதி எல்லைகளில் குளிர்கால உத்தியாக, மூடுபனியிலும் தெளிவாக காட்டும் சிறப்பு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கூடுதலான வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பனியை சாதகமாக பயன்படுத்தி, தீவிரவாதிகள் எல்லைக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளது. எனவே, குளிரை பொருட்படுத்தாது, இரவு நேர ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. உஜ், பன்சந்தார், செனாப் பகுதிகளில் உள்ள ஆற்று பகுதிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. எல்லைக்கு செல்லும் வழிகளில் கூடுதல் எண்ணிக்கையில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன,’ என்று தெரிவித்தார்.

Related Stories: