வாகன சோதனையில் 40 கிலோ புகையிலை பறிமுதல்: 2 பேர் கைது

கமுதி: கமுதி அருகே, 40 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக இருவரை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள வங்காருபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அபிராமம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ஆட்டோவில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் வீரசோழன் கிராமத்தை சேர்ந்த கபூர்முகமது மகன் அப்துல்ரஹீம்(33), நைனார்முகமது மகன் முகமதுபரூக் என்பதும், அபிராமத்திலிருந்து, பார்த்திபனூருக்கு 40 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்த முயன்றது தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ரூ.46,900 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories: