சென்னைப் பல்கலை. தேர்வில் முறைகேடு: விசாரணை குழு தலைவராக சிண்டிகேட் குழு உறுப்பினர் சொக்கலிங்கம் நியமனம்

சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதாமல் சான்றிதழ் பெற முயன்றது தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என துணைவேந்தர் தெரிவித்துள்ளார். விசாரணை குழுவின் தலைவராக சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு உறுப்பினர் சொக்கலிங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலை தூரக்கல்வியில் பயின்றதாக தேர்வு எழுதாமல் சான்றிதழ் பெற முயற்சித்ததாக புகார் எழுந்ததையடுத்து, 117 பேர் தேர்வு எழுதாமல் முறைகேடாக சான்றிதழ்களை பெற முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் விசாரணை நடைபெறுகிறது.

Related Stories: