மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கலைஞர் திருத்தியது செல்லும்!: வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கலைஞர் திருத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகளை நீக்கியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. ஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் மோகன்ராஜ் 2007ல் வழக்கு தொடர்ந்தார். 1970ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தை எதிர்த்து 37 ஆண்டுகள் கழித்து வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Related Stories: