உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்?.. பிரியங்கா காந்தி சூசகம்..!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பிரியங்கா காந்தி என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப் மாநிலம் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 8ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடங்கியிருந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பிற்குப் பின்னர் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவர பல்வேறு வியூகங்களைச் செயல்படுத்த தொடங்கியுள்ளனர். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத பாஜகவின் ஆதித்தனாத்தும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் போட்டியட உள்ளனர்.

கோரக்பூர் தொகுதியில் பாஜக முதல்வர் யோகி ஆதித்தனாத்தும், கர்ஹல் தொகுதியில் அகிலேஷ் யாதவும் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பிரியங்கா காந்தி என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். காங்கிரசின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற நிருபரின் கேள்விக்கு என்னை தவிர வேறு யாரும் தெரிகிறார்களா என பிரியங்கா கூறியுள்ளார். மீண்டும் நிருபர் விடாமல் கேட்டதற்குஎனது முகம் தெரிகிறது அல்லவா? என்று பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது கட்சியால் அறிவிக்கப்படாத நிலையில் பிரியங்கா காந்தி பதிலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உ.பி.  சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரசின் தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கூட்டாக வெளியிட்டனர்.

Related Stories: