மாணவியை அடையாளப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை : தஞ்சை எஸ்.பி. பேட்டி

தஞ்சை: மாணவியை அடையாளப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சை எஸ்.பி. ரவளிபிரியா கூறினார். இதுகுறித்து அவர் நேற்று அளித்த பேட்டி: மாணவி லாவண்யா விஷம் குடித்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடந்த 15ம் தேதி தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிகிச்சையில் இருந்த மாணவியிடம் டாக்டர்களின் அனுமதியுடன் மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெற்றார்.

போலீசார் நடத்திய விசாரணையிலும், மாணவி மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்திலும் மதமாற்றம் தொடர்பாக எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. அதுபோல அவரது பெற்றோரும் சொல்லவில்லை. அதனால் முதல் தகவல் அறிக்கையில் மதமாற்றம் குறித்து குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில் மாணவி சிகிச்சையில் இருப்பது போலவும், அவர் பேசுவது போலவும் சமூக வலைதளங்களில் வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. இது சிறார் சட்டப்படி குற்றம். இதை எடுத்தது, பரப்பியது யார்? என்பது குறித்து மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது லாவண்யாவின் பெற்றோர் அளித்த மற்றொரு புகாரில் மதமாற்றம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

Related Stories: