அபுதாபி விமான நிலைய தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் பஞ்சாப் கொண்டு வரப்பட்டது..!!

சண்டிகர்: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலைய தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் பஞ்சாப் கொண்டு வரப்பட்டது. அபுதாபியில் ஆயில் டேங்கர் மற்றும் விமான நிலையம் மீது ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்தியர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அபுதாபி வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

Related Stories: