டெல்லியில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், வார இறுதி ஊரடங்கை வாபஸ் பெற டெல்லி முதல்வர் கோரிக்கை!!

டெல்லி : டெல்லியில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், வார இறுதி ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். நடப்பு மாதத்தின் தொடக்கத்தில் தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுத்தது. நாள் ஒன்றுக்கு சுமார் 30,000 பேர் கொரோனா பாதிப்பிற்கு இலக்காகி வந்தனர்.இதனால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய டெல்லி அரசு, கடைகள் திறப்பிற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த நிலையில் சில நாட்களாக டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைய.தொடங்கியது  

நேற்று டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 12,000 ஆக குறைந்தது. இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்த பரிந்துரை கடிதத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மாநில ஆளுநர் அணில் பைஜானுக்கு அனுப்பியுள்ளார். தொற்று குறைந்து வருவதை அடுத்து டெல்லியில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை அறிவிக்கப்பட்டு இருக்கும் வார இறுதி ஊரடங்கினை திரும்பப் பெற அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கவும் தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆளுனரை கேட்டுக் கொண்டுள்ளார். 

Related Stories: