ஜன.25 வரை வறண்ட வானிலையே நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வரும் 25ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்தது. வடகிழக்கு பருவமழை நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.     

Related Stories: