×

கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் பிப். முதல் வாரம் தொடங்கி செப். இறுதி வரை நடைபெறும்: நிலம் தர முன் வரும் நில உரிமையாளர்கள்

சிவகங்கை: கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் விரைவில் தொடங்க இருப்பதால் நில உரிமையாளர்கள் அதனை வரவேற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை உள்ளிட்ட 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அகழாய்வு பணிகள் அடுத்த மாதம் முதல் வாரம் தொடங்கி செப். மாதம் இறுதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகழாய்வு பணிக்காக ரூ.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்திருக்கும் நிலையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 8-ம் கட்ட அகழாய்வு நடத்த கீழடி நில உரிமையாளர்கள் நிலம் தர முன்வந்துள்ளனர்.

 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் விரைவில் தொடங்க இருப்பதையும் நில உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர். கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 3 முறையும், தமிழக தொல்லியல் துறை 4 முறையும் அகழாய்வு பணியை நடத்தி முடித்திருக்கின்றனர். 8-ம் கட்ட அகழாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில் சில நில உரிமையாளர்கள் அகழாய்வுக்கு நிலம் தர மறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே 5-ம் கட்ட அகழாய்வுக்கு ஐந்தரை ஏக்கர் நிலம் வழங்கி பேரசிரியர் முருகேசன் என்பவர் மீண்டும் நிலம் தர முன் வந்திருக்கிறார். சந்தை நிலவரப்படி நிலத்துக்கான விலையை அரசு தந்தால் அடுத்த கட்ட அகழாய்வு பணிக்கு நிலம் தருவோம் என்றும் நிலஉரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர். இதில் ஒருசில நில உரிமையாளர்கள் நிலம் தர சம்மதித்திருப்பதால் விரைவில் அகழாய்வு பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நில உரிமையாளர் பேட்டி:

5-ம் கட்ட அகழாய்வுக்கு தானாக முன்வந்து தான் என் நிலத்தை அரசுக்கு வழங்கினேன் என நில உரிமையாளரும், பேராசிரியருமாக முருகேசன் பேட்டியளித்தார். தற்போதும் மனமகிழ்வோடு தான் 8-ம் கட்ட அகழாய்வுக்கும் எங்கள் நிலங்களை அரசு தருகிறோம் என கூறினார்.


Tags : Bottom, 8th Phase, Excavation Works, Feb. , To begin with
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...