போக்குவரத்து விதி மீறிய வாகன ஓட்டிகளை போட்டோ எடுத்து அபராதம் விதிக்கும் அல்லிநகரம் போலீசார்

தேனி : தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம், ஹெல்மெட், இன்சூரன்ஸ், முகக்கவசம் ஆகியவை இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதற்காக வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போலீசார் தங்களது ‘பைன் லேப்’ இயந்திரம் மூலம் வாகன ஓட்டுனர்களை நிறுத்தி விசாரிக்காமல் அபராதம் விதித்து வருகின்றனர். இதை அறியும் வாகன ஓட்டிகள் அபராதத்தை ஆன்லைன் மூலம் செலுத்துகின்றனர். வாகன சோதனை செய்யும் பெரும்பாலான போலீசார் பைன் லேப் மூலம் விதி மீறி வாகனம் ஓட்டுவோர் மீது அபராதம் விதிப்பது, அவர்களுக்கே தெரியாத நிலை உள்ளது. வாகனங்களின் உரிமங்களை புதுப்பிக்கும்போதோ அல்லது விற்கும்போது அபராதம் விதித்தது தெரிய வரும்.

இந்நிலையில், தேனி அல்லிநகரம் காவல் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார், போக்குவரத்து விதி மீறி வரும் வாகன ஓட்டுனர்களை நிறுத்தி, அவர்களுக்கான அபராதத்தை பைன் லேப்டாப் இயந்திரம் மூலம் விதிப்பதோடு தங்களது செல்போனில் வாகன ஓட்டிகளை புகைப்படம் எடுத்து அதனை பைன் லேஸ் இயந்திரத்தில் ஆவணப்படுத்தி அதற்கான ரசீதையும் கொடுத்து அனுப்புகின்றனர். இதன் மூலம் அபராதம் விதிக்கப்படும் வாகன ஓட்டிகள், தங்களது தவறை உணர்ந்து திருத்திக் கொள்ளும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. அல்லிநகரம் போலீஸாரின் இந்த நடவடிக்கை மற்ற காவல் நிலைய போலீசார் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Stories: