பந்தலூர் அருகே சாலையோரத்தில் கொட்டி கிடக்கும் ரேஷன் அரிசி-கால்நடைகள் உண்பதால் உயிரிழக்கும் அபாயம்

பந்தலூர் :  பந்தலூர் இரும்புபாலம் பாறைக்கல் சாலைப்பகுதியில்  ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலையோரத்திலும், பராமரிப்பு இல்லாத கிணற்றிலும் மர்ம நபர்கள் சுமார் 50  கிலோ எடையுள்ள ரேஷன் அரிசியை  கொட்டி சென்றுள்ளனர். இது அப்பகுதி பொதுமக்கள்  மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனை ஆடு, மாடுகள் உண்பதால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. பொதுமக்கள் கூறுகையில் ‘‘இப்பகுதியில் ஏற்கனவே  கொட்டியுள்ள ரேஷன் அரிசியை தின்ற  ஆடுகள் இறந்துள்ளன.ரேஷன் அரிசியை சாலையோரத்தில் கொட்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என பொதுமக்கள்  வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: