17 ஊழியர்களுக்கு தொற்று எதிரொலி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

குன்னூர் :  நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள சிம்ஸ்  பூங்காவிற்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கு இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக கலெக்டர் உத்தரவின் பேரில் பூங்காக்கள் அனைத்தும் காலை 10 மணி முதல் 3 மணி வரை மட்டுமே திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வரக்கூடிய சுற்றுலா பயணிகள் 2 தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.   

இந்நிலையில், நேற்று முன்தினம் பூங்காவில் பணிபுரியும் 17 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பூங்காவில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சிம்ஸ் பூங்கா நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தினமும்  காலை மற்றும் மாலை நேரங்களில் பூங்கா ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும், பூங்கா முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் கட்டாயமாக சோதனை செய்த பிறகே பூங்காவிற்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Related Stories: