13,587 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்-காணொலி காட்சி மூலம் முதல்வர் பங்கேற்பு

தர்மபுரி : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக, தர்மபுரி மாவட்டத்தில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலை அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் திவ்யதர்சினி, எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டனர். டிஆர்ஓ அனிதா, முன்னாள் எம்எல்ஏக்கள் தடங்கம் சுப்ரமணி, இன்பசேகரன், முன்னாள் எம்.பி.சேகர், வர்த்தகர் அணி மாநில துணை அமைப்பாளர் தர்மசெல்வன், வக்கீல் மணி, சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் செந்தில்குமார் மற்றும் பயனாளிகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில், ₹35 கோடியே 42 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் 591 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் ₹56 கோடியே 20 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற 46 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி துறை, பேரூராட்சிகள் துறை, பழங்குடியினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வீட்டு வசதி மேம்பாட்டுக்கழகம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, சமூக பாதுகாப்புத்துறை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில், 13,587 பயனாளிகளுக்கு ₹157 கோடியே 41 லட்சத்து 88 ஆயிரத்து 552 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது முதல்வர் பேசுகையில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேங்கை மகன். ஒரு வேலையை அவரிடம் தந்தால், அதை மிகச்சிறப்பாக செய்து முடிப்பார்,’ என்றார். பின்னர்இ வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் 10 இடங்களில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடத்தி, 34ஆயிரம் மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இதில் 10ஆயிரம் மனுக்கள் மீது தீர்வு கண்டு, 150 இடங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த முயற்சி தமிழக முதல்வர் உத்தரவால் நடந்துள்ளது,’ என்றார்.

Related Stories: