கல்லூரி மாணவர்களுக்கு பிப்.1 முதல் பிப்.20ம் தேதி வரை ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 20ம் தேதி வரை ஆன்லைன் முறையில்  செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று  அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்முடி, அனைத்து அரசு, தனியார் கல்லூரி மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் மூலம் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும். கல்லூரி இறுதியாண்டு தேர்வு நேரடியாக சுழற்சி முறையில் நடத்தப்படும். ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் நடத்திய பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். கிராமப்புற மாணவர்கள் அப்லோட் செய்த விடைத்தாள்கள் வந்து சேர்வது தாமதமானாலும் பெற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories: