×

தொடர்ந்து 2-வது நாளாக ஏறு முகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ. 48 உயர்ந்து சவரன் ரூ.36,752-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48  உயர்ந்துள்ளது. அனைத்து காலகட்டத்துக்குமான பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால் தேவை அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு மற்றும் இறங்கு முகமாகவே இருந்தது. இன்று சற்று அதிகரித்துள்ளது.  

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.  

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 48  ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,594-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சவரன் விலை ரூபாய் 48 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,752 க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.69.30 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூபாய் 69,300.00 எனவும் விற்பனையாகி வருகிறது.


Tags : On the face of the climb, the price of gold
× RELATED பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு,...