5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் தேவையில்லை : ஒன்றிய அரசு

டெல்லி : 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் தேவையில்லை என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் 5 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு முகக்கவசம் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் நேரடி மேற்பார்வையில் முகக்கவசம் அணியலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், பெரியவர்களைப் போல முகக்கவசம் அணிய வேண்டும்.

அறிகுறியற்ற, லேசான பாதிப்புகளுக்கு சிகிச்சை அல்லது நோய் தடுப்புக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைக்க கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரத்தம் உறைதல் ஏற்படும் அபாயத்தை கண்காணிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லேசான தொற்றில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழக்கமான குழந்தை பராமரிப்பு, ஊட்டச்சத்து மற்றும் உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: