ஓய்வுபெற்ற பேராசிரியரின் மனைவியை கொன்று நகை பறிப்பு

பவானி: ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே லட்சுமி நகர், கவிஞர் கண்ணதாசன் நகரை சேர்ந்தவர் கணேசன் (61). ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி வளர்மதி (55). இவர்களது இரு மகள்களுக்கும் திருமணமாகி கோவையிலும், தர்மபுரியிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் பவானியில் உள்ள கருவூலத்திற்கு கணேசன் சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த வளர்மதியிடம் 2 மர்ம நபர்கள் பேச்சுக் கொடுத்தபடி, அவரது 6 பவுன் தாலிக்கொடியை பறிக்க முயன்றனர். அவர் கூச்சலிட்டதால் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினர். கணேசன் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் வரவேற்பறையில் ரத்தக்காயத்துடன் வளர்மதி இறந்து கிடந்தார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிந்து, சுற்றுப்புறப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் கொள்ளையரை தேடி வருகின்றனர்.

Related Stories: