சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் மதபோதகர் கைது

ஊட்டி: ஊட்டி அருகே காந்தல் பகுதியை சேர்ந்தவர் சூரி ஸ்டீபன் (54). மத போதகரான இவர் அதே பகுதியை  சேர்ந்த உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்று தனிமையில் இருந்த 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. சிறுமியின் தாய் புகாரின்படி ஊட்டி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, சூரி ஸ்டீபனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Related Stories: