சாராயம் விற்ற 3 பேர் கைது

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஆர்எம்ஐ நகரில் கள்ளச்சாராயம் விற்பதாக செங்கல்பட்டு மது விலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி துரைப்பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆர்எம்ஐ நகரில் உள்ள முட்புதரில் மறைத்து வைத்திருந்த 105 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர். இதுதொடர்பாக புதுப்பட்டினத்தை சேர்ந்த சேட்டு (51) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் புதுச்சேரி, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்றது தெரிந்தது. இதையடுத்து, சாராயம் கடத்துவதில் உடந்தையாக இருந்த அடையாளச்சேரியை சேர்ந்த கிருபாகரன் (28), பேரம்பாக்கத்தை சேர்ந்த புருஷோத்தமன் (41) ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.

Related Stories: