அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மணவாளநகா், கலைஞர் நகரை சேர்ந்தவர் ராஜன். நேற்று முன்தினம் இரவு ராஜன், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த 3 செல் போன்களையும், மற்றொரு வீட்டில் ரூ.11 ஆயிரம், 2 செல் போன்களை திருடி சென்றனர். இதேபோல் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிமோகன் என்பவரது வீட்டில் நுழைந்த மர்மநபர்கள், அலமாரியில் வைத்திருந்த 4 சவரன் நகை, ரூ.3 ஆயிரம், 2 செல்போன்களை திருடி சென்றனர். அப்போது, 2 செல்போன்களின் கவர்களை மட்டும் அங்கு வீசி விட்டு சென்றனர். புகாரின்படி மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: