தொழிலதிபர் வீட்டில் 43 சவரன் கொள்ளை: வேலைக்கார தம்பதிக்கு வலை

அம்பத்தூர்: கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 39வது தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (45). பட்டரவாக்கத்தில் இன்ஜினியரிங் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி சுஜாதா (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களது வீட்டில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை சேர்ந்த விக்னேஷ் (27), அவரது மனைவி சத்யா ஆகியோர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தங்கி, வீட்டு வேலை செய்தனர்.

கடந்த 10ம் தேதி சந்திரசேகர் வீட்டில் இருந்து ஆயிரம் ரூபாய் திருடியதாக விக்னேஷ், அவரது மனைவி சத்யா ஆகியோரை வேலையை விட்டு நீக்கி உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சுஜாதா, பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 43 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரிந்தது. இதுகுறித்து சந்திரசேகர், கொரட்டூர் போலீசில் புகார் செய்தார். அதில், விக்னேஷ் மற்றும் அவரது மனைவி சத்யா மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்து இருந்தார். எனவே, போலீசார் நடவடிக்கை எடுத்து நகைகளை மீட்டு தர வேண்டும் என கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேலைக்கார தம்பதியை தேடி வருகின்றனர்.

Related Stories: