×

மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்; டிஜிபி எச்சரிக்கை

சென்னை: மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சரகள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சின்னங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதிகாரிகள் தங்களின் வாகனம் லெட்டர் பேடு, விசிட்டிங் கார்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு விதிகளின்படி முக்கிய நபர்கள், அதிகாரிகளை தவிர மற்றவர்கள் சின்னங்களை பயன்படுத்தக்கூடாது. சட்டங்கள் மீறப்படும்போது சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் அரசு சின்னங்களை சாட்சியங்கள் முன்னிலையில் பறிமுதல் செய்யவும், காணொளியாக பதிவு செய்யவும் டிஜிபி அறிவுரை வழங்கியுள்ளார்.

Tags : DGB , Criminal action will be taken against those who misuse the symbols of the Central and State Governments; DGP alert
× RELATED தவறு செய்யும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு