இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள லாகூரில் குண்டுவெடிப்பு; 3 பேர் உயிரிழப்பு.! ஏராளமானோர் படுகாயம் என தகவல்

லாகூர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்த்ததில் 3 பேர் உயிரிழந்தனர். லாகூரில் உள்ள அனார்கலி சந்தையில் நடந்த குண்டுவெடிப்பில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பால் லோஹரி கேட் பகுதியில் கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள், மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும்,  அனார்கலி பஜார் என்ற வணிகநகரமான லாகூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: