மகசூல் பாதிப்பால் பீட்ரூட் விவசாயிகள் கவலை

கோத்தகிரி :  கோத்தகிரியில் மலைக்காயான பீட்ரூட்டுக்கு விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலைக் காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டைகோஸ்,கேரட், பீட்ரூட்  அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் நெடுகுளா,ஈளாடா,பட்டக்கொரை,கதகட்டி,கைக்காட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் பீட்ரூட் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு அதிக மழைப்பொழிவு காரணமாக மலைகாய்கறிகளின் விளைச்சல் மிகக் குறைந்த அளவே உள்ளது. இதனால் சமவெளிப்பகுதி சந்தைகளில் தற்போது பீட்ரூட் கிலோவிற்கு ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது.போதுமமான விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் பீட்ரூட் பயிரிட்ட விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்: தற்போது பீட்ரூட் விலை எதிர்பார்த்த அளவிற்கு கிடைத்துள்ளது. ஆனால் மழைப்பொழிவு காரணமாக விளைச்சல் மிகக் குறைந்த அளவே உள்ளது.எனவே ரூ.800க்கு விற்பனையாகின்ற உரம் வாங்குவதற்கு கூட முடியாத நிலை உள்ளது. அதிக அளவு பீட்ரூட் பயிரிட்டு விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்றனர்.நிலங்களில் பயிரடப்பட்ட பீட்ரூட் ஆடர்கள் இருந்தால் மட்டுமே அறுவடை செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

Related Stories: