இடமலைக்குடியில் பாலம் கட்ட அனுமதி தொழிலாளர்கள், உபகரணங்கள் செல்ல வனத்துறையினர் அனுமதிக்க கோரிக்கை

மூணாறு : கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பழங்குடியினர் வசிக்கும் ஊராட்சியான இடமலைக்குடி வனச்சாலையில் இட்லிப்பாறை அருகே 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்படாத பாலத்தின் அணுகு சாலை அமைக்க, கடந்த வருடம் ஊராட்சியின் கோரிக்கையை ஏற்று, வனத்துறை அனுமதி வழங்கியது. ஆனால் மழைக்காரணமாக ஒப்பந்தகாரர் பணியை தொடங்க முடியவில்லை.

ரூ.22 லட்சம் செலவில் பாலத்தின் இருபுறமும் அணுகுமுறை சாலை அமைப்பதுதான் திட்டம். இதற்க்காக கட்டுமான பொருட்கள் கொண்டு செல்வதற்கும், தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்கும் மற்றும் உபகாரணங்கள் கொண்டு செல்வதற்கும், பஞ்சாயத்து வனத்துறையிடம் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் அனுமதி கோரிய போதிலும், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கிடையே வனத்துறையினர் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து இந்த சாலையை போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் அமைக்கும் வேலையை தொடங்கியுள்ளது.

மார்ச் மாதத்துக்குள் இடமலைக்குடி சாலையை போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் என்று தலைமைச் செயலர் பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து இத்திட்டத்திற்காக வனத்துறையினர் சுமார் ரூ.17 லட்சம் ஒதுக்கியுள்ளனர். ஆனால், பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட பின் தொகை அனுமதித்து ஒப்பந்த நடவடிக்கைகள் எல்லாம் பூர்த்தியாகி இருக்கும் நேரத்தில் கட்டுமான தொழிலாளர்களை அனுமதிக்கவில்லை. எனவே, வனத்துறையினர், அணுகு சாலை அமைக்க தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பழங்குடியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: