மகாராஷ்டிராவில் வரும் திங்கட்கிழமை அன்று 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்தப்படும் : மாநில கல்வித்துறை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்தப்படும் எனவும் கூறியுள்ளது. கொரோனா காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளிகளில் நடைபெறும் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. மஹாராஷ்டிர மாநிலத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜனவரி 25 முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மீண்டும் திறக்க மகாராஷ்டிரா கல்வித்துறை எடுத்த முடிவு மாணவர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஒப்புக் கொண்டதாக பள்ளி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: