மனைவியை கைமாற்றும் கும்பலில் மேலும் ஒரு வாலிபர் கைது: கைது எண்ணிக்கை 7 ஆனது

திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மனைவிகளை கைமாற்றும் வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் கைது எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே கருகச்சால் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் மனைவிகளை கைமாற்றும் கும்பல் தொடர்பாக திருச்சூர் போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். இதுதொடர்பாக அவரது கணவர் உள்பட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் தினமும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கேரளாவில் மனைவிகளை கைமாற்றுதல் தொடர்பாக 20க்கும் மேற்பட்ட குழுக்கள் செயல்படுவதும் தெரியவந்தது. மேலும் இளம்பெண் வேறு ஆண்களுடன் உல்லாசமாக இருப்பதை கணவரே ரகசியமாக வீடியோ எடுத்து உள்ளதும், இந்த வீடியோவை காண்பித்து மிரட்டி கடந்த 2 வருடமாக மனைவியை பலருக்கும் விருந்தாக்கியதும் தெரியவந்தது. இந்த தகவல் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்தது.

இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அதில் ஒருவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டார். இதற்கிடையே நேற்று ஒருவரை போலீசார் கைது செய்தனர். திருச்சூர் அருகே பாலா பகுதியை சேர்ந்த அந்த வாலிபரை, திருச்சூரில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கில் ைகது 7 ஆக உயர்ந்துள்ளது.

இவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே மேலும் பல திடுக்கிடும் தகவல் கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது. விசாரணைக்கு பின் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: