×

கொரோனா தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வராது... ஓமிக்ரானுக்கு பிறகும் புதிய தொற்றுகள் வர வாய்ப்பு : WHO பகீர்!!

ஜெனீவா : கொரோனா தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனீவாவில்  உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,கொரோனா வைரஸ் இப்போதைக்கு முடிவுக்கு வராது. ஓமிக்ரானுக்கு பிறகும் புதிய தொற்றுகள் வர வாய்ப்புகள் உள்ளன.

ஒமிக்ரான் வேண்டுமானால் தீவிரம் குறைந்ததாக இருக்கலாம்.   ஆனால் இது லேசான நோய் என்று தவறாக வழிநடத்தப்படுகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கைக்கு காரணமாகிறது,  உயிர் இழப்புகளையும் ஏற்படுத்துகிறது.  இந்த வைரஸ் இன்னும் தீவிரமாக பரவி வருகிறது . பலர் இன்னும்  பாதிக்கப்படலாம், என்றார்.

இதனிடையே உலகம் இன்னும் கொரோனா தொற்றின் முதல் கட்டத்தில் தான் உள்ளது என்றும் கொரோனா தொற்று  எப்போது முடிவுக்கு வரும் என்பது இப்போது கணித்து கூறி விட முடியாது என்று உலக பொருளாதார மன்றத்தில் அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆண்டனி பாசி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : டாக்டர் டெட்ரோஸ் அதானோம்,உலக சுகாதார அமைப்பு
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது