×

ரஷியா, உக்ரைனை ஆக்கிரமித்தால் அது அந்நாட்டிற்கு பேரழிவாக இருக்கும் :அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை

வாஷிங்டன் : ரஷியா, உக்ரைனை ஆக்கிரமித்தால் அது அந்நாட்டிற்கு பேரழிவாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் தான் பதவியேற்ற ஓராண்டு நிறைவை முன்னிட்டு செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பேசினார். அப்போது ரஷியா, உக்ரைனை ஆக்கிரமித்தால் அது பேரழிவாக இருக்கும் என்றும் ரஷிய பொருளாதாரத்திற்கும் கடுமையான இழப்புகள் ஏற்படும் என்றும் எச்சரித்தார். ஏற்கனவே தான் 600 மில்லியன் டாலர் மதிப்பிலான அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை உக்ரைனைக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ரஷியாவிற்கு பாடம் புகட்ட கூட்டாளிகளும் தயாராக உள்ளனர் என்றார். உக்ரைனைக்குள் ரஷியா மேலும் முன்னேறினால் நான் உறுதி அளித்ததை போன்று பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்த பிடன், உக்ரைனைக்கு சென்றால் ரஷியர்கள் உடல் ரீதியான உயிரிழப்புகளையும் சந்திப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே உக்ரைன் எல்லையில் ரஷியா 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்து உள்ளதாகவும் உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷியா மீது அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளி நாடுகளும் பெரும் பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாகவும் தெரிகிறது. உக்ரைன் பிரச்சனையில் ரஷியாவிற்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும் கடும் முரண்பாடுகள் வளர்ந்து வருகின்றன.


Tags : Russia ,Ukraine ,Chancellor ,Joe Biden , ரஷியா, உக்ரைன்,அமெரிக்க அதிபர், ஜோ பிடன் ,எச்சரிக்கை
× RELATED ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட...